வந்தே பார்த் ரயில் உணவை கழுவி ஊற்றிய நடிகர் பார்த்திபன்! - Seithipunal
Seithipunal


இந்திய நகரங்களுக்கிடையே செல்லக்கூடிய ஒரு அதி நவீன, அதிவேக விரைவு ரயில் வந்தே பாரத். இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழான முன்னெடுப்பில் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் 18 மாத கால உழைப்பில் இது உருவாகியுள்ளது.

இந்த வந்தே பாரத் ரயில் ஒன்றை தயாரிக்க ரூ.100 கோடியாகும். வந்தே பாரத் தனது முதல் பயணத்தை 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் நாள் தொடங்கியது. 

தலைநகர் டெல்லியிலிருந்து வாரனாசிக்கான சோதனை ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தற்போது நாடுமுழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இதன் சேவை விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு ரயிலில் கொடுக்கப்பட்ட உணவு தரமானதாக இல்லை என்று, நடிகர் பார்த்திபன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் சமூகவலைத்தள பதிவில், "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை. 

பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பார்த்திபனின் புகார் கடிதத்தில், "உணவு மற்றும் சிக்கன் படுமோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக்கொண்டும், இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம். நன்றி" என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Parthiban Condemn to Vanthe Bharat Train Food


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->