சசிகலாவின் விடுதலை மற்றும் அரசியல் வருகை குறித்து, கமல் ஹாசன் பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரமானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது. 

மதுரையில் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சாரமும், மதுரையில் வைத்தே தொடங்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தீவிர களப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முன்னதாக புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தேர்தலில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல் ஹாசன், " கட்டுப்பாடுடன் எதனை செய்தாலும் வரவேற்கிறேன். விவசாயம் தோண்டறியபோதே மதுவும் தோன்றிவிட்டது. மது விற்பனைகளை ஆட்சியர்களின் மேற்பார்வையில் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் நீதி மய்யம் நல்லதை செய்யும். சசிகலாவின் வருகையை பற்றியெல்லாம் நினைக்க எங்களுக்கு நேரம் இல்லை. அதனை தவிர்த்து எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது " என்று பதிலளித்து சென்றார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Kamal Hassan Pressmeet 17 Jan 2021 Chennai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->