நடிகர் தனுஷின் அப்பா கதிரேசன் கவலைக்கிடம்.!! டிஎன்ஏவை எடுத்து பாதுகாக்க மனைவி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷின் அப்பா கதிரேசன் கவலைக்கிடம்.!! டிஎன்ஏவை எடுத்து பாதுகாக்க மனைவி கோரிக்கை.!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி என்ற தம்பதியினர், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தனுஷ் தங்கள் மகன் என்றும், தங்களுக்கு வயது ஆகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்று, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இதையறிந்த நடிகர் தனுஷ் அவர்கள் சொல்வது உண்மை இல்லை.  இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் கதிரேசன் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்..

இதன் காரணமாக கதிரேசனின் மனைவி மீனாட்சி தன் கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் வழக்கின் விசாரணைக்காக அவரது டிஎன்ஏவை சேகரித்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் தனது வழக்கறிஞர் மூலம் மருத்துவமனையின் டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக கதிரேசனின் வழக்கறிஞர் தெரிவித்ததாவது, "நடிகர் தனுஷின் அப்பாவான கதிரேசனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நேரத்தில் கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரது டிஎன்ஏவை எடுத்து பராமரிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்.

இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்ற போது நடிகர் தனுஷ் அவரின் அங்க அடையாளத்தை லேசர் மூலம் அளித்திருந்தார். பள்ளிக்கூட சான்றிதழ் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார். நடிகர் தனுஷின் பெற்றோர் கதிரேசன் மீனாட்சி உள்ளிட்டோர் தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றன. 

எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்வோம் என்று கூறிய தனுஷ் இதுவரைக்கும் வழக்கு பதிவு செய்யவில்லை. அவர் உண்மையை மறைக்க பார்க்கிறார்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor dhanush father kathiresan DNA preserve for health issue mother meenatchi request


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->