2 ஆண்டில் சிதைந்த காதல் வாழ்க்கை...! இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை...! காரணம் என்ன...? - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டிமுருகனின் 20 வயது மகள் தர்ஷினி, குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மனஅழுத்தங்களின் பின்னணியில் பரிதாபகரமான முடிவைத் தேர்ந்தெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரத்தீஸ்வருடன் காதலித்து, இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு குழந்தையின்மை மற்றும் அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் இவர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனவேதனைக்குள்ளான தர்ஷினி, சில நேரங்களில் பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியதும், பின்னர் சமரசம் செய்யப்பட்டு மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு தர்ஷினி வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் ஆறுமுகநேரி காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை பாண்டிமுருகன் காவலில் புகார் அளித்துள்ளார். திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குள் இளம்பெண் உயிரிழந்துள்ளதால், சட்டப்படி திருச்செந்தூர் சார் ஆட்சியர் கவுதம் தலைமையில் இந்த வழக்கு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மரணம் தற்கொலையா? அல்லது பின்னணியில் வேறு காரணமா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

சினேகா தற்கொலை தடுப்பு மையம் (Sneha Suicide Prevention Centre) சென்னையில் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும், தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கும் 24/7 இலவச உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். டாக்டர். லட்சுமி விஜயகுமாரால் நிறுவப்பட்ட இது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆலோசனை வழங்குகிறது. 
தொடர்பு எண்கள்:
044 - 24640050
044 - 24640060 
முக்கிய தகவல்கள்:
நேரம்: 24 மணி நேரமும் செயல்படும்.
நேரடி மையம்: R.A. புரம், சென்னை (காலை 8 - இரவு 10 மணி).
சேவை: 40 ஆண்டுகளுக்கும் மேலாக மனநல ஆதரவு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், தயங்காமல் இந்த எண்களை அழையுங்கள். உதவி பெறலாம். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Love life ruined 2 years Young woman commits suicide by hanging herself What reason


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->