கவின் கொலை வழக்கு - அழுதபடி நீதிமன்றத்திற்கு வந்த கொலையாளி சுர்ஜித்.!!
accused surjith come in court with cry
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ். சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் பரிதாபமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சரவணன் மகள் சுபாஷினியை காதலித்து வந்ததும், இது பிடிக்காததால் சுபாஷினி சகோதரர் சுர்ஜித், அவரை வெட்டிக்கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெல்லை இரண்டாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.
அதன் படி இன்று நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருகின்ற 11ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இருவரும் நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்தபோது குற்றவாளி சுர்ஜித் நீதிமன்றத்திற்கு அழுது கொண்டே வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
accused surjith come in court with cry