கண்டெய்னர் லாரி மோதி அரசுப் பள்ளி ஆசிரியர் பலி: சூலூரில் சோகம்!
accident lorry soolur Puthur
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் செல்லப்ப பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த விவேகானந்தர் (வயது 56), பட்டணம் புதூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆசிரியர் விவேகானந்தர், பள்ளிப் பணிகளை முடித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பட்டணம் புதூர் பகுதியில் எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டது. அங்கு வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது.
இந்த விபத்தில், விவேகானந்தர் லாரியின் பின்பக்க டயரில் அடிபட்டு, அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர், அப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்ததால், அவரது திடீர் மறைவு செல்லப்ப பாளையம் பள்ளி நிர்வாகம் மற்றும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
accident lorry soolur Puthur