மக்களே உஷார்.. ஏ.சி. வெடித்து விபத்து - இளைஞர் உயிரிழப்பு!
AC Fire young man death in Chennai
சென்னை அருகே ஏ.சி.வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொளத்தூர், வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷியாம் (வயது 28). இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி அவரது அம்மா வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று இரவு எட்டு மணிக்கு ஷ்யாம் வீட்டில் தனது அறையில் ஏ.சி மற்றும் டி.வி ஆன் செய்துவிட்டு படுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஏ.சி தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கீழ்தளத்தில் வெடித்த சத்தம் கேட்டு முதல் தளத்தில் இருந்த ஷாமின் அப்பா மற்றும் தம்பி வந்து பார்த்தபோது அறை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதனால் அறைக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் திரு.வி.க நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த அறையில் இருந்த ஷியாமை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் தீப்பற்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின் உயர் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை என தெரிவித்தனர்.
English Summary
AC Fire young man death in Chennai