#தமிழகம் | போதை பொருள் பயன்படுத்திய மாணவனை கண்டித்த 4 ஆசிரியர்களுக்கு தண்டனை! - Seithipunal
Seithipunal


ஆரணி அருகே போதை பொருட்கள் பயன்படுத்திய மாணவர்களை கண்டித்ததற்காக, அரசு பள்ளி ஆசிரியர்கள் 4 தண்டிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருவண்ணாமலை, ஆரணி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பூபதி என்ற மாணவனை நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து அடித்ததாக சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் அந்த மாணவன் போதை பொருள் பயன்படுத்தியதால் ஆசிரியர்கள் கண்டித்தது, பெற்றோர்களை அழைத்து வருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால், அந்த மாணவன் ஆசிரியர்கள் தன்னை தாக்கியதாக பொய் புகார் அளித்ததாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படியில் இரு ஆசிரியர்களுக்கு பணியிடை நீக்கமும், இரு ஆசிரியர்கள் பணியிடை மறுத்தாலும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்கள் இடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதை பயன்படுத்திய மாணவனை கண்டித்த ஆசிரியர்கள் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சமபவத்தில் உரிய விசாரணை நடத்திய பின்பு, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aarani Govt School Issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->