ஆடி அமாவாசை..புண்ணியம் கிடைக்க வீரராகவர் கோயிலில் இரவு முழுவதும் தங்கிய பக்தர்கள்!  - Seithipunal
Seithipunal


அமாவாசை தினத்தன்று வீரராகவர் கோயிலில் இரவு தங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பதால்  ஏராளமான பக்தர்கள் அங்கு  இரவு  தங்கி, வீரராகவரை தரிசித்துவிட்டு சென்றனர்.

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு  செய்தனர்.
 
திருவள்ளூரில் உள்ள பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில்  அமாவாசை தினத்தன்று பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது உண்டு. அதிலும் குறிப்பாக  ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிகளவில் வழிபடுவது வழக்கம்.  இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும என்பதாலும்,  முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்  என்பதால் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை,  காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ  வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் அருகில் குளத்தில் முன்னோர்களுக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.  

அதனை தொடர்ந்து நோய்கள் தீர்க்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரராகவப் பெருமாளை வழிபட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.  அதே நேரத்தில் உறவினர்கள் இறந்திருந்தால், இந்த வீரராகவர் கோயிலில் இரவு தங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் இங்கு இரவு நேரங்களில் கோயில் அருகே தங்கியும், வீரராகவரை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadi Amavasai Devotees who stayed overnight at the Veerarakaver temple to earn blessings


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->