உங்கள் ஆதார் கார்டு நகலை இவர்களிடம் தரவேண்டாம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஆதார் கார்டு நகலை, எந்தவொரு நிறுவனத்திடமும் வழங்கவேண்டாம் என்று பொது மக்களுக்கு தங்கள் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"ஓட்டல்கள், திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டுகளின் நகல்களை சேகரிக்கவோ, அதனை வைத்திருக்கவோ அனுமதி இல்லை.

பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது மையங்களில் ஆதார் டவுன்லோடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். அப்படி டவுன்லோடு செய்தால், நகல் எடுத்ததும், கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்ததை நிரந்தரமாக டெலிட் செய்ய அறிவுறுத்த வேண்டும். 

ஆதார் கார்டு நகலை சமர்ப்பிப்பதற்கு பதிவாக, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் ‘மாஸ்க் ஆதார் கார்டை’ (masked Aadhaar card) பயன்படுத்தலாம். இந்த மாஸ்க் ஆதார் கார்டை, ஆதார் இணையதளத்தில் இருந்து (https://myaadhaar.uidai.gov.in/) டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம், பொதுமக்கள் தங்களின் ஆதார் கார்டு நகலை கொடுத்தால், அதனை அவர்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். எனவே, ஆதார் கார்டு நகலை அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் வழங்க வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadhaar Card Union Govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->