நாளை முதல் ஆதார், பான், GST-யில் புதிய மாற்றங்கள்! முழு விவரம் இதோ!
Aadhaar Card GST Credit card bank
நவம்பர் 1 முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களுக்காக பல முக்கிய நிதி விதிகள் அமலுக்கு வர உள்ளன. இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், எளிமையான ஆதார் புதுப்பித்தல், எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டண மாற்றம், என்.பி.எஸ். முதல் யு.பி.எஸ். மாற்றம் வரை நீட்டிப்பு மற்றும் புதிய ஜி.எஸ்.டி. பதிவு முறை ஆகியவை அடங்கும்.
புதிய விதிகளின் படி, நவம்பர் 1 முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு சேமிப்பு பொருட்களுக்கு அதிகபட்சம் நான்கு நபர்களை காப்பாளர்களாக நியமிக்கலாம். இது அவசரநிலைகளில் குடும்பத்தினர் நிதியை எளிதாக அணுகுவதற்கும், உரிமை தொடர்பான வழக்குகளைத் தடுக்கவும் உதவும். காப்பாளர் சேர்த்தல் மற்றும் மாற்றும் நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.1,000-க்கு மேற்பட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது வாலெட் டாப்-அப், கல்வி கட்டணம் போன்ற பரிவர்த்தனைகளில் 1 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதார் புதுப்பித்தல் முறையில், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் ஆவண பதிவேற்றம் இல்லாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனில் திருத்தும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. பயோமெட்ரிக் மாற்றங்களுக்கு மட்டும் நேரடியாக ஆதார் மையம் செல்ல வேண்டியுள்ளது. புதிய கட்டணங்களின் படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75, பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125 வசூலிக்கப்படும்.
ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் 30க்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிறு வணிகங்களுக்கான பதிவு செயல் முறையை எளிதாக்கும் புதிய ஜி.எஸ்.டி பதிவு முறைவும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
English Summary
Aadhaar Card GST Credit card bank