திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவில் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்..!! கோவில் வளாகத்தில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


கோவில் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பகதர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.

வெளி மாவட்டம்  மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பகதர்கள் வந்து செலவர். இந்நிலையில், இந்த கோவிலின் ராஜ கோபுரத்தில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார்.

இதனை கண்ட பக்தர்கள் அங்கிருக்கும் காவலர்களிடம் இது பற்றி கூறியுள்ளனர். காவலர்கள் வந்து பார்க்கும் போது சுமார் 20 அடி  உயரத்தில்  ஏறி அமர்ந்துள்ளார். தனது செல்போனை ஒருவர் பிடிங்கி கொண்டதாகவும் அதனை வாங்கி தரவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

இதனை அடுத்து அவரிடம்  நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வர்சிகுடி வடக்கு கூவம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Youth attempt to suicide


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal