தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


தண்டவாளத்தில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் கஸ்பா மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்  ( 35 ). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று இரவு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சரக்கு ரெயில் வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியைடைந்த அருகில் உள்ள பொதுமக்கள் அவரை அங்கிருந்து எழுந்திருக்க சொல்லி சொல்லியும் மது போதையில் அவர் எழவில்லை.இதனால், சரக்குரயில் மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் தண்டவாளங்கில் அமர்ந்து மது அருந்த வேண்டாம் என பல முறை காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் பலர் கேட்காமல் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young man who sat on the tracks and drank alcohol was killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal