பேய்கள் அழைப்பதாக கூறி உயிரை மாய்த்து கொண்ட வாலிபர்! - Seithipunal
Seithipunal


பேய்கள் அழைப்பதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு வெல்டிங் தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் காடேற்றி  பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்த ராமசுப்பு என்பவருக்கு திருமணமாகி 3 மகன்ளும், ஒரு மகளும் உள்ளனர் . மகளுக்கு திருமணமாகிவிட்டது.ஆனால் 33 வயதான  மூத்த மகன் இசக்கி முத்துகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.வெல்டிங் வேலையில் ஈடுபட்டு வந்த இசக்கி முத்துகுமாரு கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம்   இசக்கி முத்துகுமார் வீட்டு அறையில் இருந்து வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது அறை கதவை  உடைத்து பார்த்தபோது உத்திரத்தில் இசக்கி முத்துகுமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.பின்னர் இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கி முத்துகுமார் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், " தன்னை 2 பேய்கள் அழைப்பதாகவும், ஆகவே அதனுடன் செல்கிறேன்" என  எழுதப்பட்டிருந்தது. தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்துகுமார் மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man who lured souls by claiming to communicate with ghosts


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->