மிக பெரிய வரப்பிரசாதம்..முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த MP இராசா !
A very great blessing MP Raaja thanked the Chief Minister
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் பணிகளை நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக அரசு தலைமை கொறடா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் விரிவாக்கம் பணியினை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சி அரசு உதவிபெறும் புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உணவு வழங்கி, குழந்தைகளுடன் உணவு உட்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருக்கவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும் குறிப்பாக இரத்த சோலை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்துக் கொள்ளவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும், காலை உணவுத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக 15.09.2022 அன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 25.08.2023 மற்றும் 15.07.2024 அன்று இத்திட்டமானது முறையே தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நகர்புற பகுதிகளில் உள்ள 3415 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3.05 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவாக்கம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஏற்கனவே, இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 317 பள்ளிகளில் பயிலும் 9,858 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் மூலம் நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 63 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2,645 மாணவ, மாணவியர்கள் 6T60T ஆக மொத்தம் 12,503 மாணவ, மாணவிகள் பயனடையவுள்ளார்கள். இந்தியாவிலேயே முதன்முதலாக இத்திட்டத்தினை துவக்கி வைத்த பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும். நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளதால் இத்திட்டம் மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும். எனவே மாவட்ட மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா திட்ட இயக்குர் (மகளிர் திட்டம்) மரு.ஜெயராமன், கோத்தகிரி நகர்மன்ற தலைவர் ஜெயகுமாரி, துணைத்தலைவர் உமாநாத், கோத்தகிரி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, அருண், சாந்தசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
A very great blessing MP Raaja thanked the Chief Minister