தண்ணீர் தாகத்தில் பெயிண்ட் தின்னரை குடித்து... துடிதுடித்த 3 வயது பிஞ்சு.! மனதை உருக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் பெயிண்ட் அடிப்பதற்காக வாங்கி வைத்த தின்னரை  குடித்த மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் கோமதி தம்பதியினருக்கு  மௌலி(5) மற்றும் தேஜஸ்ரீ(3)  என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் வீட்டிற்கு வண்ணம் பூசுவதற்காக  பெயிண்ட் மற்றும் தின்னர் ஆகிய பொருட்களை வாங்கி வைத்துள்ளனர்.

கோடை காலம் என்பதால் தண்ணீர் தாகத்தில் இருந்த குழந்தைகள் தின்னரை தண்ணீர் என நினைத்து குடித்து விட்டனர். இதனால் குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக குழந்தைகளை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேஜஸ்ரீ  பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மகளான மௌலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A three year old girl died after drinking thinner in Namakkal five year old girl is undergoing intensive treatment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->