#சிவங்கை || பள்ளி மாடியில் இருந்த கீழே விழுந்த மாணவன், காவல்துறையினர் விசாரணை..!
A student who fell down from the school floor
பள்ளி மாணவன் மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியார் CBSC பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் அந்த பள்ளியில் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவரைமீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவர் பப்புள்கம் துப்புவதற்கு சென்ற போது அவர் கீழே விழுந்ததாக தெரிகிறது.
English Summary
A student who fell down from the school floor