ஒரு கரண்டி குஸ்கா 100 ரூபா..! சாப்பாடு, தண்ணி இல்லாமல் அல்லல்படும் தவெக தொண்டர்கள்! மாநாடு திடலில் குவியும் மக்கள்!
A spoonful of kuska costs 100 rupees Volunteers are suffering without food and water People gather at the conference venue
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் மாலை 3 மணியளவில் தொடங்குகிறது. மாநாட்டில் பங்கேற்க ஆதரவாளர்கள், தொண்டர்கள் நேற்று நள்ளிரவு முதலே குவிந்து வருகின்றனர்.
மாநாட்டுக்காக குடிநீர் வசதி, ஸ்நேக்ஸ் கிட் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், விழுப்பாட்டினால் பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் காலியாகி விட்டன. ஸ்நேக்ஸ் கிட்-ல் குடிநீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட், மிச்சர் போன்றவை இடம் பெற்றிருந்தாலும், தொண்டர்கள் மாலை 3 மணி முதல் 7 மணி வரை பயன்படுத்தும் வகையில் போதிய அளவு இல்லை என தெரிவிக்கின்றனர்.
மேலும், மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் முறையான உணவு இல்லாததால் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக உணவகங்களில் உணவை வாங்கி வருகின்றனர். அந்த உணவகங்களில் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், குஸ்கா, வெஜிடபிள் ரைஸ் போன்றவை விற்கப்படுகின்றன. ஆனால் உணவுகளின் விலை இரு மடங்கு முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் 70 ரூபாய், குஸ்கா மற்றும் வெஜிடபிள் ரைஸ் 100 ரூபாய் விலையில் விற்கப்படுகின்றன.
அதிக விலை கொடுத்து வாங்கினாலும், உணவின் தரம் குறைவாக இருப்பதால் தொண்டர்கள் அதை சாப்பிட முடியாமல் வேதனை அனுபவித்து வருவதாக கூறுகின்றனர்.
இதனால், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு ஏற்படும் சிரமம், உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீர் பற்றிய குறைபாடுகள், மாநாட்டின் அமைப்பில் திருத்தம் செய்ய தேவையை எழுப்பியுள்ளது.
English Summary
A spoonful of kuska costs 100 rupees Volunteers are suffering without food and water People gather at the conference venue