சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர்!
A religious preacher brutally attacked children claiming that the devil had entered
உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான மதபோதகர் கிங்ஸ்லி ,இவருக்கு மனைவி, 2 மகன்களும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று நேற்று அவருடைய குழந்தைகள் பக்கத்து வீட்டிற்கு சென்று விளையாடி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, 3 குழந்தைகளையும் கயிற்றால் சரமாரியாக அடித்துள்ளார்.அப்போது இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அளித்த தகவல்பேரில், கருங்கல் போலீசார் அங்கு வந்து 3 குழந்தைகளையும் மீட்டனர்.
அதனை தொடர்ந்து கிங்ஸ்லிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது, தினமும் ஊழியத்துக்கு செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே அவர்களின் உடம்பில் சாத்தான் புகுந்து விட்டதாக கருதி அவர்கள் உடம்பில் இருந்து சாத்தானை விரட்ட கயிற்றினால் கட்டி வைத்து அடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பகத்தில் சோ்த்தனர்.
English Summary
A religious preacher brutally attacked children claiming that the devil had entered