அஸ்வினி வைஷ்ணவ்-க்கு ஆ.ராசா கடிதம்...! இந்தியை ஒருபோதும் ஏற்கமாட்டோம்...!
A Rasa letter to Ashwini Vaishnav We will never accept Hindi
திமுக எம்.பி. ஆ.ராசா அவர்கள், ஒன்றிய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில அவர் குறிப்பிட்டதாவது,"இந்திய ரெயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை கொண்ட #உதகமண்டலம் ரெயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன.
உடனடியாக அவற்றை அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது.
உதகை ரயில் நிலையத்தில் இந்தி மொழியை விளம்பரப்படுத்தும் வகையில் மற்றும் பாரதியாரின் வாசகத்தை இந்து மகாசபை நிறுவனர் மதன் மோகன் மாளவியா எழுதியதாக வைக்கப்பட்டுள்ள பலகைகளை அகற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
A Rasa letter to Ashwini Vaishnav We will never accept Hindi