திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து..சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரெயில்கள் நிறுத்தம்!
A massive fire accident occurred in the goods train near TiruvallurTrains departing from Chennai Central have been halted
திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து, பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் பல ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலின் மூன்று வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியது. இதனால் எரிபொருள் கசிந்து, பின்வட்டத்தில் தீ ஏற்பட்டது. தீயின் தாக்கம் பெரிதாக உள்ளதால் 5 பெட்டிகள் தீக்கிரையாகியுள்ளன எனத் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தால் திருவள்ளூர் பகுதி கரும் புகை முகமாக காட்சியளிக்கிறது. தீ மேலும் பரவும் அபாயம் இருப்பதால், தீயணைப்பு துறையினர் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால காலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் வந்தே பாரத் ரெயில் – சென்ட்ரலில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது,இதேபோல காலை 6.00 மணி சதாப்தி எக்ஸ்பிரஸ், 6.10 மணி கோவை அதிவிரைவு ரெயில் – நிறுத்தம்,அரக்கோணம் வழியாக சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் – பாதியிலேயே நிறுத்தம்,
மங்களூருவில் இருந்து வரும் சென்னை மெயில் ரெயில் – திருவள்ளூரில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, ரெயிலின் வேகன்கள் தண்டவாளத்திலிருந்து விலகியதால் எரிபொருள் கசியல் மற்றும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்து சம்பவத்தை வேடிக்கை பார்க்க அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ரெயில்வே துறையும், தீயணைப்பு துறையும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.சென்னை – திருப்பதி சாலையில் புகை சூழ்நிலை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
A massive fire accident occurred in the goods train near TiruvallurTrains departing from Chennai Central have been halted