ஈரோடு வனப்பகுதியில் மர்மமாக இறந்த ஆண் யானை.! வனத்துறை அதிகாரிகளின் சோதனையில் வெளியான உண்மை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் செண்ணம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வடபர்கூர்
காப்புக்காடு வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவல் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதை கண்டனர். இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் அந்த வனப் பகுதியில் வைத்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து யானையின் சாவில் இருந்த மர்மம்  விலகி உள்ளது.

கால்நடை மருத்துவர்களின் அறிக்கையின் படி இறந்த யானைக்கு 30 வயதுக்கு மேலிருக்கும் என்றும் அந்த யானை மற்ற யானைகளுடன் ஏற்பட்ட சண்டையின் போது மரணமடைந்ததாகவும் யானையை உடற்கூறு செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக  வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a male elephant was found dead in erode forest range vetenary doctors clear no foul play


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->