மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்திய கும்பல்..கடலூரில் அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கைவிரலை வெட்டிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரது  மகன் மணிகண்டன். பலசரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வரும் இவர் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த ரூ.6 லட்சத்திற்கு பதிலாக ரூ.67 லட்சத்தை கொடுக்குமாறு பழனிச்சாமி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் குடும்பத்துடன்  மணிகண்டன் மற்றும் நடராஜன்  சீர்காழிக்கு இடம் மாறினர்.

இதனையடுத்து, அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்த பழனிச்சாமி இறுதியாக அவர்கள் இருக்கும் மணிகண்டனின் தந்தை நடராஜனை காரில் கடத்தினர். இந்தநிலையில் காரைக்காடு பகுதியில் நடராஜன் மற்றும் அவரை கடத்தி வந்த 5 பேரை போலீசார் பிடித்தனர்

அப்போது அவர்கள் 5 பேரையும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கும்பல் நடராஜனை கடுமையாக தாக்கியதுடன் அவரது கைவிரலையும் துண்டித்தது தெரியவந்தது. நடராஜனுக்கு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடராஜனை இவர்கள் திமுக கொடி கட்டிய காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A gang that kidnapped a father for the loan taken by his son Shocking incident in Cuddalore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->