கொழுந்தியாளை வைத்து.., பைனான்ஸ் தொழில் செய்தவர் மனமுடைந்து தற்கொலை முயற்சி.! பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


பணம் நகைகளை வாங்கிக் கொண்டு உறுதியளித்தபடி கொழுந்தியாளை திருமணம் செய்து கொடுக்காதவரை, குடும்பத்தினருடன் கைதாக வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் முத்துப்பழனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் வட மாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் நிலையில், பாலசுப்பிரமணியனுக்கு முருகன், அறிவழகன் என்ற நெருங்கிய நண்பர்கள் இருந்து வந்துள்ளனர். 

பாலசுப்பிரமணியன் வடமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த நிலையில், இலாபத்தை சேமிக்க அறிவழகனிடம் யோசனை கேட்டுள்ளார். ஒரே வங்கி கணக்கில் பணத்தை சேமித்தால் வருமானவரி பிரச்சினை வரும் என்பதால், வெவ்வேறு வங்கிக்கணக்குகளில்  பணத்தை செலுத்தலாம் என அறிவழகன் தனது அறிவை பயன்படுத்தி கூறியுள்ளார். 

இதன்படி, அறிவழகன், அவரது மனைவி கலைச்செல்வி, மற்றொரு நண்பர் முருகன், பாலசுப்பிரமணியன் பெயரில் இரண்டு என ஐந்து வங்கி கணக்குகள் புதிதாக துவங்கப்பட்டு பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு விவரங்கள், ஏ.டி.எம் கார்டுகள், பண பரிவர்த்தனை என அனைத்தையும் அறிவழகன் கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில், திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்த பாலசுப்பிரமணியனிடம் அறிவழகனின் மனைவியின் தங்கையான முத்துலட்சுமி என்ற பெண்ணை (கொழுந்தியாள்) அறிமுகம் செய்து வைத்து, திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை வைத்து பாலசுப்பிரமணியத்திடம் பணம் மற்றும் நகைகள் என ரூ.1 கோடியே 22 இலட்சம் வரை அறிவழகனின் குடும்பத்தினர் கறந்துள்ளனர். 

பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு முத்துலட்சுமியின் தொலைபேசியிலிருந்து பாலசுப்பிரமணியத்துக்கு பேசிய கலைச்செல்வி, தன் தங்கை வேறு ஒருவரை காதலிக்கிறார் என்றும், நீங்கள் வேறு பெண் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம், தமிழகம் வந்து முத்துலட்சுமியின் பெற்றோர் மற்றும் அறிவழகனின் குடும்பத்தினரிடம் பேசி பார்த்துள்ளனர். 

முத்துலட்சுமி சம்மதம் தெரிவிக்காததால், திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணி நான் அனுப்பிய ரூபாய் ஒரு கோடியே 22 லட்சம் பணம் மற்றும் 45 பவுன் நகைகளை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கவே, அதற்கு அறிவழகன் மற்றும் அவரது சகோதரர் கண்ணன், அவரின் குடும்பத்தார் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை மிரட்டி அனுப்பியுள்ளனர். 

இதனால் மனமுடைந்து போன பாலசுப்பிரமணியம் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். பாலசுப்பிரமணியத்திற்கு உற்ற நண்பரானாக ஆதரவோடு இருந்து வந்த முருகன் நண்பன் பாலசுப்பிரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பின்னர் ஊர் மக்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஊர் பெரியோர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது குறித்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அறிவழகன், கலைச்செல்வி, முத்துலட்சுமி, கண்ணன் உட்பட 6 பேர் மீது பதிவு செய்து, அறிவழகன், கலைச்செல்வி, முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Family threatening Finance Business Friend in Dindigul Police Arrest All of Culprits


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal