சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் காதலில் விழுந்த கல்லூரி மாணவி,.. வாலிபருடன் ஓட்டம்!
A college student who fell in love at the place of the trip ran away with a young man
சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் காதலில் விழுந்த கல்லூரி மாணவி வாலிபருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பேச்சிப்பாறை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த மாணவி ஒருவர் குலசேகரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.இந்தநிலையில் கடந்த 11-ந் தேதிவிடுதி காப்பாளரிடம் தனக்கு உடல்நலம் சரியில்லையென கூறி விடுதியில் இருந்துள்ளார்.
பின்னர் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி விடுதியை விட்டு கிளம்பிய மாணவி கல்லூரிக்கு செல்லாமல் தலைமறைவானார்.மேலும் மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவி கல்லூரிக்கு வரவில்லையென மாணவியின் பெற்றோருக்கு கல்லூரி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவியின் தந்தை குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபருடன் மாயமானது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் கூறியதாவது: கடந்த ஆண்டு மாணவி பிளஸ்-2 படித்துக் கொண்டிருந்த போது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கோதையாறு பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
அப்போது அந்த பகுதி வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த மாணவியிடம், ஒரு வாலிபர் பேச்சுக் கொடுத்து அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களைக் குறித்தும் விசாரித்துள்ளார். அப்போது அந்த வாலிபர், மாணவியின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார்.இதையடுத்து செல்போனில் மாணவியிடம் பேச்சுக் கொடுத்து நட்பை வளர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மாறிய நிலையில் மாணவி, அந்த வாலிபரை வரவழைத்து அவருடன் சென்றது தெரியவந்துள்ளது.
English Summary
A college student who fell in love at the place of the trip ran away with a young man