தாய்மாமனாக இருக்க வேண்டியவன்.. தந்தையான கேவலம்.! சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


காலங்கள் நகர்ந்து செல்லும் போது வாழ்க்கையை பார்ப்பதா இல்லை, சுற்றி உள்ள மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதா என்பதனை எண்ணியே காலம் நகர்கிறது. சுற்றி உள்ளவர்களை விட உறவினர்களிடமே கவணமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சாட்சி போல் இச்செய்தி அமைந்துள்ளது. 

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி வேலை செய்யும் தம்பதிகள், அவரது ஒரு மகளுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில். அங்கு விவசாய பணிகள் நலிவுற்ற நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது மகளுடன் சென்னை அருகேயுள்ள திருவொற்றியூருக்கு குடிபெயர்ந்தனர். 

வயிற்று பிழைப்புக்காக அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். அவர்களது. 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்த மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அவரது தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோத்து பார்த்த மருத்துவர்கள் அந்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மருத்துவமனைக்கு வந்த மகளிர் போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய போது அந்த மாணவி கூறிய பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , அப்பெண்ணின் அண்ணன் உறவுமுறை உள்ள சித்தியின் மகன்(19) தான் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து, குறிப்பிட்ட சித்திமகன் வீட்டுக்கு சென்று சோதனை  செய்தபோது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அந்த இளைஞனை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a brother raped and make pregnant his sister in cuddalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->