சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது: அப்பா யார் தெரியுமா? திருப்பூரில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி திருப்பூர் அழைத்து வந்து குடும்பம் நடத்தி குழந்தை பெற வைத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது, குறிப்பாக சொல்லப் போனால் பள்ளி மாணவிகளுக்கு பாலியல்  தொந்தரவு ஆனது அளிக்கப்பட்டு வருகிறது, ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்துவது போன்ற குற்ற செயல்களும் நடந்தேறி வருகிறது. அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவிகளை காதலிப்பதாக கூறி மாணவர்கள் அவர்களுடன் ஊர் சுத்தி விட்டு அவர்களை ஏமாற்றி விடுவதும்  நடந்து வருகிறது.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் செங்கப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி  குழந்தை பெற்றடுத்துள்ளார்.சிறுமிக்கு  பெற்றோர் இல்லை. இதனால், பாட்டி வீட்டில் வசித்து வந்தார். 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய அந்த சிறுமிக்கும், 18 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.அப்போது  அந்த சிறுவன், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி திருப்பூர் அழைத்து வந்தான். இங்கு வந்ததும், திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமி கர்ப்பமானார்.

இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுவன் அழைத்து சென்றபோது அங்கு சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் கே.வி.ஆர். நகர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 18 வயது சிறுவனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A baby girl was born to the little girl Do you know who the father is? Excitement in Tiruppur


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->