சென்னையில் இருந்து 843 பேர் ஹஜ் பயணம்!
843 people from Chennai are going on a Hajj pilgrimage
சென்னையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 5,730 பேர் வருகிற 30-ந்தேதி வரை 14 விமானங்களில் புனித பயணம் செல்கின்றனர்.
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணமாக சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு செல்வார்கள்.இந்த புனித ஹஜ் பயணத்திற்காக, முதல் ஹஜ் விமானம் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 843 பயணிகளுடன் 2 ஹஜ் விமானம் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றது. 200 பெண்கள் உள்பட 402 பேருடன் புறப்பட்டு சென்றது. ஒரே நாளில் 2-வது விமானம் 441 பேருடன் சென்றது.
புனித பயணம் செல்பவர்களை அமைச்சர் நாசர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி., தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ., உள்பட ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சென்னையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 5,730 பேர் வருகிற 30-ந்தேதி வரை 14 விமானங்களில் புனித பயணம் செல்கின்றனர்.
ஹஜ் பயணம் செல்லும் 200 நபர்களுக்கு ஒருவர் என்ற வீதம் ஏற்கனவே அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு, அவர்கள் தங்கும் இடம், தேவையான உணவு, புனித பயணத்தை மேற்கொள்வதற்கான வழிக்காட்டுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் ரூ.14 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மானியம் கொடுக்கப்பட்டு உள்ளது' என கூறினார்.
English Summary
843 people from Chennai are going on a Hajj pilgrimage