சிதம்பரத்தில் சிக்கிய வங்கதேசத்தினர் - 8 பேர் கைது.!!
8 bangaladesh peoples arrested in chithambaram
சட்ட விரோதமாக சிதம்பரத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் சட்ட விரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த சிலர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் படி போலீசார் சிதம்பரத்திற்கு விரைந்து வந்து, அங்கு தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உரிய பின்னணியை ஆராயாமல் வேலை அளிக்கக் கூடாது என்று கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
8 bangaladesh peoples arrested in chithambaram