7 வயது சிறுமி கொலை வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை!
7 year old girl murder case Death penalty for the criminal
7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.இத்தகைய குற்றவாளிகள் வாழ்வதற்கு உரிமை இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு தனது உறவினர் ஒருவரின் மகளான 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்த நீலு என்ற நபர், பின்னர் அந்த சிறுமியின் உடலை சரயன் நதியில் அவர் தூக்கி விசியுள்ளார்.
அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நீலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சீதாபூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தநிலையில் நீலுவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று அறிவித்தார். 38 வயதான குற்றவாளி நீலு, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302(கொலை), 364(கடத்தல்), 376AB (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றவாளிக்கு ரூ.13,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு என்று குறிப்பிட்ட நீதிபதி, ஒரு அப்பாவி சிறுமிக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரம் மனிதகுலத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார். இதுபோன்ற குற்றவாளிகள் சமூகத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் என்றும், இத்தகைய குற்றவாளிகள் வாழ்வதற்கு உரிமை இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
7 year old girl murder case Death penalty for the criminal