10ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. 7 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி . இவர் அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவருக்கும் ஆயில்பட்டி  பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் செய்ய 6 மாதங்களுக்கு முன் உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆயில்பட்டிக்கு சென்ற கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி செய்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 7 பேரை கைது செய்து  செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 Person arrested in Namakkal


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->