ஓசூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய லஞ்ச வழக்கு: இடைத்தரகரின் சேலம் வீட்டில் 7 கிலோ தங்கம், ரூ.27 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
7 kg Gold 27 Lakh Cash Seized from Broker House in Hosur Pollution Control Board Bribery Case
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்சப் புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சிவகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கைதான இடைத்தரகர் சிவகுமாருக்குச் சொந்தமான சேலத்தில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது கணக்கில் வராத 7 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.27 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சிவகுமார் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவரது கடவுச்சீட்டையும் (Passport) காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
7 kg Gold 27 Lakh Cash Seized from Broker House in Hosur Pollution Control Board Bribery Case