தவெக கூட்டணிக் கூட்டத்தில் காங்கிரஸ் தவறாமல் பங்கேற்கும்...! ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என மாணிக்கம் தாகூர் பேட்டி...!
Congress definitely participate Tvk alliance meeting Rahul prime ministerial candidate says Manickam Thakur
தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,"முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தவறாமல் பங்கேற்கும்.

வரும் 9-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதம் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது. முடிந்துபோன ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதைத் தவிர இந்த விவகாரம் தொடர்பாக வேறு எதையும் கூறுவதற்கு இல்லை.இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
English Summary
Congress definitely participate Tvk alliance meeting Rahul prime ministerial candidate says Manickam Thakur