திண்டுக்கல் அருகே பரிதாபம்.! ஆற்றில் மூழ்கி 6ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலி.!
6th class 2 boys drowned river in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி ஆறாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி நாகஜோதி. இவர்களுடைய மகன் திருமுருகன் (11) அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் தாடிக்கொம்பு பகுதியில் வசித்து வரும் நாகஜோதியின் சகோதரி சரஸ்வதியின் மகன், ஆறாம் வகுப்பு மாணவன் மனோஜ் குமாரும்(11), திருமுருகனும் குடகனாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
இதில் இருவரும் ஆற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இருவரின் துணிகள் கரையிலிருந்ததை பார்த்தவர்கள், சந்தேகமடைந்து ஆற்றில் இறங்கியும் இரண்டு பேரையும் தேடினர்.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றினர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
6th class 2 boys drowned river in Dindigul