காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பசுக்கள்.! வீடீயோ எடுத்த பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் அருகில் தரைப் பாலத்தை கடப்பதற்கு முயற்சி செய்த 4 பசுக்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 

கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் மிகுந்த கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதியில் இருக்கின்ற பள்ளங்கள் மற்றும் ஓடைகள், காட்டாறுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. 

இந்த செந்நிற நீர் மாக்கம்பாளையம் வனப்பகுதி வழியே செல்லும் பாலாற்றில் கலந்து ஆர்ப்பரித்து ஓடியுள்ளது. நேற்று மாலை நேரத்தில், வழக்கம் போல மாக்கம்பாளையம் அருகில் கோம்பையூர் சாலையில் அமைந்துள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. 

அப்பொழுது, அங்கே 15-க்கும் மேற்பட்ட பசுக்களின் கூட்டம் தரைப்பாலத்தின் வெள்ளத்தில் நீந்தி பாலத்தை கடக்க முயன்றுள்ளன. அதே நேரத்தில் நீரின் வேகத்துக்கு மாடுகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால், 4 மாடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இதைக் கண்ட அப்பகுதியினர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Cows Falling down In sathyamangalam flood


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->