சாயல்குடியில் 3 போலீசாருக்கு அரிவாள் வெட்டு.!!
3policemen slashed with sickle in Ramanathapuram
போக்சோ வழக்கு குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசாருக்கு அரிவாள் வெட்டு!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆனந்தநகர் பகுதியைச் சேர்ந்த ஜேசு என்ற அசோக் குமார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
அதன் பிறகு ஜேசு என்கிற அசோக் குமார் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் அவருக்கு பிடிவாண்ட் பிறப்பித்தது ராமநாதபுரம் நீதிமன்றம். நீதிமன்றத்தின் உத்தரவின்படி சாயல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த 3 காவலர்கள் இன்று ஜேசு என்கிற அசோக்குமாரை கைது செய்ய சென்றுள்ளனர்.

அப்போது மூன்று போலீசாரையும் அசோக் குமார் அறிவாளால் வெட்டியுள்ளார். இவர்களில் காளீஸ்வரன் என்ற காவலருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவலர் காளீஸ்வரனுக்கு சாயல்குடி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜேசு என்ற அசோக் குமாரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சாயல்குடி பகுதியில் பெரும் பரபரப்பு பெற்றுக் கொண்டது.
English Summary
3policemen slashed with sickle in Ramanathapuram