மக்களே ஜாக்கிரதை! பிறந்தநாள் கொண்டாட்டம்! பீரோவை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை! - Seithipunal
Seithipunal


மணலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மணலி விமலாபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவர் சென்னை பாரிமுனையில்  உள்ள கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும் இவரது மனைவிக்கும் 4 வயதில் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று தனது 4 வயது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார்.

அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த நாராயணன் குடும்பத்தினர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 30,000 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் குடுத்துள்ளனர். தகவலில் பேரில் அங்கு வந்த கைரேகை நிபுணர்களுடன் போலீசார் வீட்டை சோதனை செய்தனர். பின்னர், அக்கம் பக்கத்தினரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

35 pounds of jewelry was stolen by breaking the lock of a house near Manali


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->