ஒழுங்கா பஸ் ஓட்ட தெரியாதா man உனக்கு..? கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து மோதியதில் 32 பேர் படுகாயம்...!
32 people were seriously injured luxury bus that lost control and crashed
விழுப்புரத்தில் கூட்டேரிப்பட்டு அருகே பந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் 50 வயதான பாலையன் அரசுப்பேருந்து ஓட்டுநர் வேலை பார்க்கிறார். இந்த ஓட்டுநர், திருவக்கரையிலிருந்து திண்டிவனம் நோக்கி அரசு பேருந்தை ஓட்டி வந்தார்.

அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் நெடுஞ்சாலையில் திடீரென்று நிறுத்தி பயணிகளை ஏற்றியுள்ளார்.
அப்போது கேரள மாநிலம் கொச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் பின்னால் மோதி கடுமையான விபத்துக்குள்ளானது.
இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த கூட்டேரிப்பட்டை சேர்ந்த முனுசாமி மனைவி கவுரி( 42) உட்பட 32 பேர் காயம் அடைந்தனர்.
இதுத்தொடர்பாக தகவலறிந்த மயிலம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
32 people were seriously injured luxury bus that lost control and crashed