காலையில் கிறிஸ்டோபர் கைது.. மாலையில் 300 பேர்களின் பட்டியல் தயார்.! காவல்துறை அதிரடி.!!
300 people list ready
காவல்துறையினர் தமிழகத்தில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் பட்டியல் கிடைத்திருப்பதாகவும், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்த நிலையில், பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆன்லைனில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்போரின் பட்டியலில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக இந்திய தூதரகத்திற்கு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் பட்டியலை அனுப்பியது.
குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கிறிஸ்டோபார் அல்போன்ஸ் என்பவர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக், வாட்ஸ்அப், மெஸ்சேன்ஜ்ர் மூலமாக 15 பேருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக கிறிஸ்டோபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமிகள் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக கைதான கிறிஸ்டோபருக்கு 15 நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் அல்போன்சை 15 நாள் காவலில் விசாரிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸின் சமூக வலைதளக் குழுவில் இருக்கும் 300 பேர்களின் பட்டியலை தயாரித்துள்ளது திருச்சி மாநகர காவல்துறை.