முட்புதரில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை...! - கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்களுக்கு வலைவீசிய காவலர்கள்...!
3 year old child found covered blood thicket Police caught perpetrators gang harassment
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதியரின் 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து பெற்றோரும் அப்பகுதி மக்களும் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த முட்புதர் பகுதியில் உடல் முழுவதும் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் சிறுமி கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக சிறுமியை மீட்ட அவர்கள் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சை முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்திய காவலர்கள், முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்களை கண்டறிந்துள்ளனர். சிறுமியை நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், தடயங்களை மறைக்கும் நோக்கில் முட்புதருக்குள் வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற மூன்று பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஞ்சுக் குழந்தை மீது நிகழ்த்தப்பட்ட இந்த மனிதநேயமற்ற கொடூரச் செயல், கும்மிடிப்பூண்டி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
3 year old child found covered blood thicket Police caught perpetrators gang harassment