பெரும் சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை..!!
3 people committed suicide in same family at tenkasi
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை..!!
சங்கரன்கோவிலை அடுத்த தேவிபட்டினம் கிராமத்தை சேர்ந்த ரமணன், அவருடைய மனைவி கமலா மற்றும் அவருடைய மகள் நாகஜோதி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கமலா மற்றும் அவருடைய மகள் நாகஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப் பார்த்த அருகில் இருந்த தோட்டத்தை சேர்ந்த விவசாயி சிவகிரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமணனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 people committed suicide in same family at tenkasi