தமிழகத்தில் மீண்டும் லவ் ஜிகாத் கொடுமை.. 17 வயது சிறுமியை கடத்தி,மதமாற்றி ஒரே நாளில் திருமணம் - இந்து முன்னணி கண்டனம்! - Seithipunal
Seithipunal


இந்து முன்னணி விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், "கிருஷ்ணகிரியை சேர்ந்த டெம்போ டிரைவர் தன் வீட்டோடு இணைத்து கட்டியுள்ள கடையை அப்துல் கைப் என்பவனுக்கு மெக்கானிக் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளார். டெம்போ டிரைவரின் மனைவி மனநிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 15 மற்றும் 17 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், பெற்றோரின் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய அப்துல் கைப் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக் கூறி சிறுமியின் தாயார் மருந்து சாப்பிட்டு தூக்கத்தில் இருந்தபோது பெண்ணிண் தந்தையும் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பெங்களூர் அழைத்து சென்றுள்ளான்.

பெண்ணை காணவில்லை என்றும், அப்துல் கைப் சிறுமியை கடத்தி சென்றதை குறித்தும் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்துள்ளார். விசாரனை செய்த அனைத்து மகளில் காவல் நிலைய போலிசார் சிறுமியை காப்பகத்தில் தங்க வைப்பதாக தந்தையிடம் தெரிவித்துவிட்டு அப்துல் கைப்புடனே அனுப்பி வைத்துள்ளனர். அன்று மாலையே அந்த சிறுமி மதமாற்றம் செய்யப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைத்து அன்று இரவே கட்டாய பாலுறவில் ஈடுபட்டுள்ளான், மறுநாள் மகளை காப்பகத்தில் பார்க்க சென்ற தந்தை மகள் காப்பகத்தில் இல்லாததை கண்டு மீண்டும் புகார் அளித்தபோது மதமாற்றம் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்கள் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

காப்பகத்திற்கு அனுப்பவிருந்த சிறுமியை அப்துல் கைப் மற்றும் அவனுடன் வந்த கும்பல் கைப்பற்றி சென்று கட்டாய மதம் மாற்றி கட்டாய திருமணம் செய்து சீரழித்துள்ளது, தமிழகத்தில் சிறுபான்மையினர் போர்வையில் என்ன வேணாலும் செய்யலாம் என்ற அவல நிலை உள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள் கும்பலாக காவல்நிலையம் வந்து தங்கள் விரும்பும் சட்டவிரோத செயல்களை காவல்துறை மூலமே நிறைவேற்றி கொள்கிறார்கள், அந்த வகையில் அரசியல் சாசனம் மட்டுமல்ல எந்த சட்டத்துக்கும் அடங்காத இணை அரசாங்கத்தை சிறுபான்மையினர் நடத்தி வருகிறார்கள்.

சட்டபடி காப்பகத்துக்கு அனுப்பி சிறுமியை கடத்தி சென்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய மகளிர் காவல் நிலையம் இஸ்லாமிய கும்பலுக்கு பயந்து பெண்ணை அவர்களுடனே அனுப்பியதை பார்க்கும் போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியும் சிறுமி சம்பந்தபட்ட விஷயம் என்பதால் சமூக நலத்துறையும் இளஞ்சிறார் பாதுகாப்பு துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மர்மம் என்ன என்று தெரியவில்லை.

எனவே தவறு செய்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், சமூக நலத்துறை மற்றும் இளஞ்சிறார் பாதுகாப்புதுறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கபட்ட சிறுமிக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hindu munnani condemn to TN Police Love jihat issue


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->