3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் 14ம் தேதி பதவியேற்பு! - Seithipunal
Seithipunal



மத்திய அரசின் உத்தரவுடன், புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த 3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 14ம் தேதி பதவி ஏற்கஉள்ளனர்.

புதுச்சேரியில் முதலமைச்சர்  ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியின் தேர்தல் வியூகம் வகுத்து வருகின்றனர்.

இதற்காக சமீபத்தில் , பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆகிய வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய அரசின் உத்தரவுடன், புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செல்வம் (பாஜக மூத்த நிர்வாகி)தீப்பாய்ந்தான் (முன்னாள் எம்.எல்.ஏ.)காரைக்கால் ராஜசேகர்,இந்த நியமனங்களை ஒட்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் ரங்கசாமி, புதிதாக பரிந்துரை செய்யப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை கவர்னர் கைலாஷ்நாதனிடம் வழங்கி, அவர் அதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார் தனது பதவியை ஜூன் 27-ம் தேதி ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஜான் குமார், புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும், அவரது பதவியேற்பு மத்திய ஒப்புதல் இன்றி தாமதமானது.

இந்நிலையில், மத்திய அரசின் ஒப்புதலுடன், புதுச்சேரி சட்டப்பேரவிக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களாக செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகர் ஆகியோர் வரும் ஜூலை 14ம் தேதி பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 மாதங்களில் புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, 2026 தேர்தலுக்கான முன் வேலைகள் வலுப்பெற்று வருகின்றன.காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் கூட்டணி கூட்டாக மாநிலம் முழுவதும் நடைபயணங்கள், பிரச்சார கூட்டங்களை தொடங்கியுள்ளன.
அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா, நிர்வாக மாற்றங்கள் மூலம் தேர்தலுக்கு தயார் ஆகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 new appointed MLAs will take oath on the 14th


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->