கடலூர் உட்பட மூன்று மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி - அமைச்சர் விஜயபாஸ்கர் ..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு அனுமதி பெற்ற நிலையில் மேலும் மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூரில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 24 மணி நேர இலவச அவசர சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திறந்து வைத்தனர்.

Image result for vijayabaskar seithipunal

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மேலும் மூன்று மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இதனால், கடலூர் மாவட்டம் உட்பட 3 மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரி வரலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 medical college in taminadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->