உ.பி.யில் தமிழர்கள் முன்னேற்றம்...! - டிஜிபி பதவிக்கு இரு ஐபிஎஸ் அதிகாரிகள்...!
Tamils making progress UP Two IPS officers post DGP
உத்தர பிரதேசத்தில் பணியாற்றும் தமிழர் ஐபிஎஸ் அதிகாரிகள் டி. பிரகாஷ் மற்றும் எல்.வி. ஆண்டனி தேவ் குமார் ஆகியோருக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவருக்கு மாநில காவல்துறையின் தலைமை பொறுப்பான டிஜிபி பதவி கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

மேலும், 1994ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர்கள் இருவரும் உ.பி. கேடரில் நீண்டகாலமாக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்கள்.
நேர்மை மற்றும் திறமையால் கவனம் பெற்ற ஆண்டனி, பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றியவர்; பிரகாஷ் தற்போது ரயில்வே ஏடிஜிபியாக இருந்தார்.
இதனிடையே நிரந்தர டிஜிபி தேர்வுக்கான பட்டியலில் இவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழருக்கு உ.பி. காவல்துறை தலைமை பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Tamils making progress UP Two IPS officers post DGP