ஒரே ஆசியத் தொடரில் 3 பதக்கங்கள்...! வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக வீராங்கனைக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்த தனுஷ்...!
3 medals single Asian Games Dhanush congratulated Tamil Nadu athlete who created historic achievement
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே தொடரில் 3 பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜின் சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது வரலாற்று வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் தனுஷ், வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரின் மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

ஆசிய கண்டத்தை சேர்ந்த 45 நாடுகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.இந்த போட்டிகளில் இந்திய அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மொத்தம் 85 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.
இந்திய அணியின் வெற்றிப் பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜின் பங்களிப்பு தனிச்சிறப்பு பெற்றது.மகளிர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தினார்.
ஒரே ஆசிய விளையாட்டு போட்டியில் 3 பதக்கங்களை வென்றதன் மூலம் வித்யா ராம்ராஜ் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.வித்யா ராம்ராஜின் வெற்றிகளில் மேலும் ஒரு சிறப்பம்சமும் இடம்பெற்றுள்ளது. மகளிர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா 42 ஆண்டுகளுக்கு முன்பு படைத்த தேசிய சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்துள்ளார்.
இதன்மூலம் இந்திய தடகள வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாக பதித்துள்ள வித்யா ராம்ராஜுக்கு விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.வித்யா ராம்ராஜின் அபாரமான சாதனத்தை அறிந்த நடிகர் தனுஷும் அவரை பாராட்டியுள்ளார். தனது சாதனையை கொண்டாடும் விதமாக வித்யா ராம்ராஜை நேரில் அழைத்த தனுஷ், அவரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆகியோரும் வித்யா ராம்ராஜை நேரில் சந்தித்து பாராட்டியதுடன், அவரது சாதனையை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளனர்.தமிழகத்தின் தடகள உலகில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள வித்யா ராம்ராஜுக்கு தொடர்ந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
English Summary
3 medals single Asian Games Dhanush congratulated Tamil Nadu athlete who created historic achievement