அரசு கேபிளில் 3 முக்கிய சேனல்கள் கட்...? பின்னணியில் உள்ள உண்மை என்ன...? - தமிழக அரசு கொடுத்த அதிரடி விளக்கம்...!
3 major channels cut from government cable What truth behind it Tamil Nadu government dramatic explanation
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் இருந்து மூன்று தனியார் தொலைக்காட்சிகள் அகற்றப்பட்டதாக சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் தகவல்கள் வேகமாக பரவின. இந்த விவகாரம் அரசியல் அரங்கிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், பரவி வரும் தகவல்கள் தொடர்பாக தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளப் பதிவில் விளக்கம் வெளியிட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையிலிருந்து மூன்று தனியார் தொலைக்காட்சிகள் நீக்கப்பட்டதாக பரவி வரும் தகவல்களுக்கு எந்தவித உண்மையும் இல்லை.
குறிப்பிட்ட தொலைக்காட்சிகள் அனைத்தும் வழக்கம்போல ஒளிபரப்பில் உள்ளன.தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில குறிப்பிட்ட செட்-டாப் பாக்ஸ்களில் மட்டும் தற்காலிகமாக ஒளிபரப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகங்களுக்கு உரிய தகவல்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன.மேலும், செட்-டாப் பாக்ஸ் நிறுவனத்திடம் நிலுவைத் தொகை இருப்பதால் ஒளிபரப்பு தடை ஏற்பட்டதாக பரப்பப்படும் தகவல்களும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
3 major channels cut from government cable What truth behind it Tamil Nadu government dramatic explanation