#சென்னை || புத்தாண்டு விதிகளை மீறிய 276 வாகனங்கள் நேற்று இரவு பறிமுதல்..!! - Seithipunal
Seithipunal


புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக நேற்று மாலை முதல் பல்வேறு ஏற்பாடுகளை சென்னை பெருநகர் காவல்துறை செய்திருந்தது. குறிப்பாக சென்னையில் மட்டும் 368 இடங்களில் வாகன சோதனைகள் செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பிற்காக சென்னையில் மட்டும் 16 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இந்த நிலையில் சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களில் 24 பேர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகவும் 65 பேர் மீது மூன்று பேர் பயணித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி உயிர் இழந்துள்ளார். நேற்று இரவு மட்டும் சென்னையில் ஒட்டுமொத்தமாக 276 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

276 vehicles were impounded for violating New Year rules


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->