அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து, ரூ.4,840 ஆகவும், சவரனுக்கு ரூ.80 சரிந்து, ரூ.38,720ஆகவும் விற்கபனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26.08.2022 gold Price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->