புத்தக தான அரங்கில், 25000 புத்தகங்கள்- புத்தக கண்காட்சி அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


2023 சர்வதேச புத்தக கண்காட்சியானது கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும் இந்த புத்தக கண்காட்சி சிறப்பாக நடந்து வரும்  நிலையில் இந்த ஆண்டு அரங்கு எண்.286 இல் கூண்டுக்குள் வானம் என்ற பெயரில் புத்தக தானம் வழங்கப்படுகின்றது. இந்த அரங்கமானது சிறை மற்றும் சீர்திருத்த துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் சிறை கைதிகளுக்கு பொதுமக்கள் தானம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பலரும் இதழ் சிறை கைதிகளுக்கு புத்தகத்தை தானமாக கொடுத்து வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதில் சிறைவாசிகளுக்காக வைக்கப்பட்ட புத்தக அரங்கில் அதிகப்படியானோர் புத்தகத்தை தானம் செய்தார்கள். அந்த வகையில், இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த கூண்டுக்குள் வானம் அரங்கில் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

25000 Books In Bookfair Donate


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->